சிறிய படங்களின் காலமிது. யார் நடித்துள்ளார்கள் என்பதை விட படம் எப்படி இருக்கிறது என்பது தான் இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த வகையில் அகடு படத்தின் டீம் ஒரு நல்ல சினிமாவை கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள்.
குளிரும் குளிர் சார்ந்த இடமுமான கொடைக்கானலில் தான் இப்படத்தின் கதை நடக்கிறது. கொடைக்கானலுக்கு தன் மனைவி அஞ்சலி நாயர் மற்றும் தன் 14 வயது மகளோடு வருகிறார் விஜய் டிவி சித்தார்த். அவர் தங்கும் காட்டேஜிக்கு எதிரில் நான்கு இளைஞர்களும் வந்து தங்குகிறார்கள். சித்தார்த் பேமிலியோடு நான்கு இளைஞர்களும் மிங்கிள் ஆகிறார்கள். திடீரென நால்வரில் ஒருவன் சித்தார்த்தின் மகளோடு எஸ்கேப் ஆகிறான். இது எப்படி நடந்தது? என்ன நடந்தது? என்பதை விசாரிக்க வருகிறார் ஜான் விஜய். அந்த விசாரணையில் என்னென்ன திருப்பங்கள் நடக்குறது என்பதே அகடுவின் கதை
நாயகன் ஜான் விஜய் ஒரு காவல் அதிகாரியை கண்முன் நிறுத்துகிறார். சித்தார்த்தும் அவரது மனைவி அஞ்சலி நாயரும் பெற்றோர்களின் மனநிலையை திரையில் அப்படியே பிரதிபலிக்கிறார்கள். நான்கு இளைஞர்களின் தேர்விலும் குறையொன்றுமில்லை..கொடைக்கானலில் திருட்டு வேலைகள் செய்யும் கேரக்டரில் வரும் மூன்று இளைஞர்கள் மிரட்டி இருக்கிறார்கள்..
கொடைக்கானில் கேமரா வைக்கும் இடங்கள் எல்லாமே அழகாக இருப்பதால் படத்தில் ஒளிப்பதிவாளர் ஸ்கோர் செய்கிறார். இசை & எடிட்டிங் இரண்டுமே ஓகே ரகம்கதையில் ஒரு நல்ல கருத்தை முன் வைத்தவர்கள் திரைக்கதையில் இன்னும் பல ட்விஸ்டை முன் வைத்திருக்கலாம். இருந்தாலும் அகடு சொல்லும் நீதிக்காக நாம் படத்தைப் பாராட்ட வேண்டியதிருக்கிறது
-மு.ஜெகன் கவிராஜ்