Tamil Movie Ads News and Videos Portal

பல்வேறு மக்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை தந்த கதை – கமல்

1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்தியக் கிரிக்கெட் அணி ஜாம்பவான் அணியான மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது. இந்த வெற்றி சரித்திரம் தற்போது பாலிவுட்டில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. ரன்வீர் சிங் கேப்டன் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் அவரின் மனைவி ரோமி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்திருக்கிறார். ரிலையன்ஸ் எண்டெர்ட்யின்மெண்ட் மற்றும் வொய் நாட் எக்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை தமிழில் ராஜ்கமல் ப்லிம்ஸ் வெளியிடவிருக்கிறது. இது குறித்து பேசியிருக்கும் கமல்ஹாசன், “பல்வேறு மக்களுக்கு தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்த கதையை, கபில்தேவ் தலைமையில் மொத்த அணியும் போராடி உலகக்கோப்பையை வென்ற கதையை நம் மக்களுக்கு தமிழில் அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்று பேசியுள்ளார்.