ஊர் உலகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பீதியில் உறைந்திருக்கிறது. நேற்றைய கணக்கெடுக்கின் படி மட்டும் கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்துள்ளனர். ஆனால் இந்த நேரத்திலுமொரு கும்பல் மட்டும் அட்டக்கத்தி நந்திதாவின் முதல் க்ரெஷ் யார் என்பதை வலைவீசி தேடியிருக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
அட்டக்கத்தி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நந்திதா ஸ்வேதா அதனைத் தொடர்ந்து, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ , ‘புலி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் தனது பர்ஸ்ட் க்ரெஷ் 10ம் வகுப்பு படிக்கும் போது, தனது கணினி ஆசிரியர் மீது ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார். இதனை சீரியஸாக எடுத்துக் கொண்டு ஒரு கூட்டம் அவர் படித்த பள்ளி, எந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படித்தார்..? அப்பொழுது அவரது கணிப்பொறி ஆசிரியர் யார்..? என்றெல்லாம் சி.பி.ஜ ரேஞ்சிற்கு தேடுதலில் இறங்கி இருக்கிறதாம்..?