Tamil Movie Ads News and Videos Portal

90ML- விமர்சனம்

இதைச் செஞ்சா குடியா மூழ்கிப்போகும்னு சொல்லுவாங்க இல்லியா? அப்படி குடில மூழ்கிப்போன இளம் தக்காளிகளின் தற்போதைய கல்ச்சரும் டார்ச்சரும் தான் 90ml.

பிக்பாஸில் வாங்கிய மொத்தப்பெயரையும் பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தி இருக்கிறார் ஓவியா. தண்ணி அடிப்பது, கஞ்சாபிடிப்பது, மேரேஜ் பண்ணாமல் ஒன்லி மேட்டர் மட்டும் பண்ணுவது இவை தான் பெண் சுதந்திரம் என்பதை நிறுவுகிறது ஓவியாவின் கேரக்டர்!

ஒரு அப்பார்ட்மெண்டில் ஒன்று கூடும் ஐந்து அழகிகளில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பிரச்சனைகள். அதைச் சால்வ்டு செய்யும் ஐடியா மேக்கர் ஓவியா. சில ஜோக்கர் ஆண்களோடும், ஆக்கர் சீன்களோடும் தள்ளாடி தள்ளாடி நகர்கிறது படம். படம் பேச வரும் விசயம் கண்மூடித்தனமாக இருப்பது ஒருபுறம் என்றால் படமாகவும் 90ML நிற்கவில்லை. திரைக்கதை எனிடைம் கஞ்சா அடித்தது போல தறிகெட்டு ஓடுகிறது. இடைவேளை வரைக்கும் இடைவேலைகளை மட்டுமே பார்க்கும் சிட்டுகளால் கதை ஒரு கட்டுக்குள் நிற்கவில்லை. முரட்டு சிங்கிள்ஸ் எனப்படுபவர்கள் மட்டும் சில இடங்களில் விசிலடிக்கிறார்கள் கை தட்டுகிறார்கள். அந்த ஒரு கை ஓசை மட்டும் பலன் தருமா?