Tamil Movie Ads News and Videos Portal

ஆர்யாவுடன் இணையும் 90 எம். எல் மாசூம் சங்கர்

- Advertisement -

ஓவியா நடிப்பில் வெளியான “90 எம்.எல்” திரைப்படத்தில் ஓவியாவின் தோழியாக நடித்திருந்தவர் மாசூம் சங்கர். இவர் அதற்கு முன்பு நாகேஷ் திரையரங்கம் திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார். ’நாய்கள் ஜாக்கிரதை’ ‘மிருதன்’ ’டிக் டிக் டிக்’ படங்களை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் ஆர்யா மற்றும் சாயிஷா ஷேகல் நடிப்பில் தற்போது ‘டெடி’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மாசூம் சங்கரும் நடிக்கவிருக்கிறார். மேலும் சாக்ஷி அகர்வால், கருணாகரன் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.