நாளை இரவு அனைத்து மின்சாதனங்களையும் அணைக்க வேண்டாம் என மின்சார வாரியம் வேண்டுகோள்
மோடி அறிவித்தபடி நாளை இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை மட்டுமே அணையுங்கள். எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும் பிரிட்ஜ் உள்ளிட்ட உபகரணங்களை அணைக்க வேண்டாம். அனைத்து உபகரணங்களையும் அணைத்துவிட்டு திடீரென ஆன் செய்தால் மின்சாரம் தடைபட வாய்ப்பு உள்ளது. ஏசி வைத்திருப்பவர்கள் ஏசியை ஆன் செய்துவிட்டு மின்விளக்குகளை அணையுங்கள். பவர் பிளக்ஸ்வேஷன் என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்ததே. முடிந்தவரை விளக்குகளை தவிர மற்றவற்றை ஆன் செய்து வைத்தால் மின்விநியோகத்தில் எந்த கோளாறும் இராது என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
மின் கட்டமைப்பில் பழுது ஏற்பட்டால் மின் தடை ஏற்படுவதுடன் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அனைத்து மருத்துவமனைகளும் அவற்றின் முக்கியமான மின்சார விநியோகத்தை இழக்கக்கூடும்.