Tamil Movie Ads News and Videos Portal

85 வயது பாட்டியாக காஜல் அகர்வால்

24 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் 90 வயது பெரியவராக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது குவாலியர் பகுதிகளில் நடந்து வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். ஆனால் அவர் கமலின் பால்யகால சிநேகிதியாக 85 வயது தோற்றத்தில் நடித்து வருகிறார் என்கின்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இந்தியன் முதல் பாகத்தில் வயதான தோற்றத்தில் நடிகை சுகன்யா நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் இடம் பெறுவது தொடர்பான செய்திகள் ஏதும் இல்லாததும் குறிப்பிடத்தக்கது.