கமல்ஹாசன் 83 படத்தின் தமிழ்பதிப்பை வழங்க இருப்பதால் உள்ளபடியே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது
1983 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தியா உலககோப்பையை வென்ற தருணம் இந்தியா முழுதும் எழுந்து நின்று ஆர்பரித்த வரலாற்றின் பொன்னான தருணம். ஒரு திரில்லர் படத்திற்கிணையான போராட்டத்தை நடத்தி, நம் அணி வீரர்கள் உலககோப்பயை வென்றார்கள். அப்போதைய கேபடன் கபில்தேவ் அவர்களின் வாழ்க்கை பின்னணியில் நம் அணி உலககோப்பையை வென்றதை மீட்டுருவாக்கம் செய்துள்ள படம் தான் “83”.
கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமாகிய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ரிலயன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து இவ்வாண்டின் எதிர்பார்ப்பு மிக்க வெகு முக்கிய படைப்பான “83” படத்தின் தமிழ் பதிப்பை தமிழில் வழங்குகிறார்கள்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவை சமீபத்தில் சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடத்தினார்கள்.