கிரிக்கெட் சார்ந்து இப்படியொரு படம் இதுவரை வந்ததில்லை என்று சொல்லக்கூடிய அளவில் சதம் அடித்திருக்கிறது 83 திரைப்படம்
1983-ல் அப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் தலைமையில் இந்தியா உலகக்கோப்பையை வென்ற கதைதான் இப்படம். வரலாற்றைப் படமாக்கும் போது மிகுந்த கவனம் தேவை. மேலும் 70-75 களில் பிறந்த அனைவருக்குமே தெரிந்த வரலாறு இது என்பதால் கூடுதல் சிரத்தை எடுத்தால் தான் சரியாக இருக்கும். ஆனால் இப்படக்குழு அதை மிகச்சரியாக செய்திருக்கிறது. சம்பவங்களை கதையாக தொகுத்ததிலும், கதையை காட்சிகளாக விரித்ததிலும் அடித்து ஆடியிருக்கிறார் இயக்குநர் கபீர்கான்
கபில்தேவ் ஆக வாழ்ந்திருக்கிறார் ரன்வீர்சிங். குறிப்பாக கபில்தேவ் பேசும் தடுமாற்ற ஆங்கிலத்தை கூட தடுமாற்றம் இன்றி பேசி அசத்தி இருக்கிறார். பின்பாதியில் வரும் தீபிகா படுகோனே பாசிட்டிவ் எனர்ஜியாக இருக்கிறார். ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா சரியாகப் பொருந்தியிருக்கிறார். நடிகர்களின் பங்களிப்பால் 83 உயர்ந்து நிற்கிறது
டெக்னிக்கல் விசயங்களில் படம் இன்னும் ஒருபடி மேல் சென்றுள்ளது. தேர்ந்த ஒளிப்பதி, சிறந்த இசை, தரமான ஒப்பனை என அனைத்தும் அருமைஇந்தியா முதலாவதாக உலகக்கோப்பை வென்ற வரலாறு தெரிந்தவர்களை எல்லாம் இப்படம் மலறும் நினைவுக்குள் அழைத்துச் செல்லும். தெரியாத 80-s 90-s 2k கிட்ஸ்களுக்கு ஒரு நல்ல வரலாறை அறிமுகம் செய்யும்
-மு.ஜெகன் கவிராஜ்