Tamil Movie Ads News and Videos Portal

சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் 80-ஸ் பில்டப்!

காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகனாக உயர்ந்து இருப்பவர் சந்தானம். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படியான படத்தில் நடித்து வரும் சந்தானம், தற்போது  80-ஸ் பில்டப் என்ற நடித்து இருக்கிறார்.

கல்யாண் இயக்கி இருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ராதிகா பிரீத்தி நடிக்கிறார். மேலும் கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி,  முனீஸ் காந்த், கூல் சுரேஷ், சூப்பர்குட் சுப்பிரமணி, தங்கதுரை, கும்கி அஸ்வின், நெபு சாமி, கலைராணி என பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

நடிகர்கள் மனோபாலா மற்றும் மயில்சாமி நடித்த கடைசி படமாக இது அமைந்து இருக்கிறது. 80-களில் நடக்கும் இந்த படத்தின் கதை ஃபேன்டசி டிராமா-வாக உருவாகி வருகிறது.

1980 காலக்கட்டத்தில் நடைபெறும்  கதையம்சம் கொண்டிருப்பதால், இதற்காக உடை, இடம் ஆகியவற்றில் படக்குழுவினர் அதிக கவனம் செலுத்தி இருக்கின்றனர். காமெடி கலந்து ஃபேன்டசி டிராமா-வாக உருவாகி இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.