எத்தனையோ பேய்களை பார்த்துள்ள சினிமா ரசிகர்களுக்கு இந்த 7G பேய் எப்படியான அனுபவத்தை கொடுக்கிறது?
தன் கணவனோடு அப்பார்ட்மெண்டில் குடியேறுகிறார் ஸ்ம்ருதி வெங்கட். அங்கு ஒரு பேய் அவர் வாழ்வில் குடியேறுகிறது. பயமுறுத்தும் பேயாக இருந்தாலும் செண்டிமெண்ட் உள்ள பேய் என்பதால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே வருகிறது. முடிவில் தாய்ப்பாசமா? பேய்ப்பாசமா? என்ற கேள்விக்கு கமர்சியல் விடை தந்துள்ளார் இயக்குநர் ஹாரூன்
சோனியா அகர்வால் செண்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பாக ஸ்கோர் செய்துவிடுகிறார். ஸ்ம்ருதி வெங்கட் தனக்கு கொடுக்கப் பட்ட கேரக்டரை உணர்ந்து அழகாக நடித்துள்ளார். சுப்பிரமணிய சிவா நல்லதொரு நடிப்பை வழங்கியுள்ளார். சித்தார்த் விபின் புதுமையாக வில்லத்தனம் காட்டி ஈர்க்கிறார். KSK செல்வா சிறிய கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார்
பேய் படங்களுக்கு முதுகெலும்பே பின்னணி இசையும் ஒளிப்பதிவும் தான். அதை முழுமையாக உள்வாங்கி இசை அமைப்பாளர் சித்தார்த் விபினும், ஒளிப்பதிவாளர் கண்ணனும் உழைத்துள்ளனர். வெல்டன்
‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பது போல சின்ன கதை சின்ன பட்ஜெட் என்றாலும் படத்தை ரசிக்கும் படியாக எடுத்துள்ளார் இயக்குநர் ஹாரூன். இந்த வார இறுதிக்கு குடும்பத்தோடு சென்று ரசிக்க நல்ல சாய்ஸ் இந்த 7G
3/5
-மு.ஜெகன் கவிராஜ்