“வேண்டாம்னு சொல்ற வார்த்தைக்கு வேற பொருள் தேடக்கூடாது. வேண்டாம்னா அது வேண்டாம். அது காதலியா இருந்தாலும் சரி, மனைவியா இருந்தாலும் சரி”
அஜித் மாதிரி ஒரு பெரிய நடிகர் வுமன்ஸுக்கு ஆதரவா இப்படியான விசயத்தை வலியுறுத்துற கதையில நடிக்கிறது சமூகத்தின் தேவை. அதோடு இப்படி ஒரு கதாபாத்திரத் தேர்வு வேறு எந்த பெரிய நடிகரும் எடுக்காத முயற்சி. லவ் யூ தல
கதை?
அப்படியே பிங்க் படத்தின் சிங்க் தான். அந்தப் ப்ளாஸ்பேக் தவிர்த்து. சைலண்டாக அஜித் செய்யும் ஒவ்வொரு மேனரிசமும் அழகாக இருக்கிறது. எந்த இடத்திலும் விவேகம் விஸ்வாசம் வகையறா நடிப்பு துளியும் தெரியாதது ஆகச்சிறப்பு. ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா மூவரும் கோர்ட்டில் வீசப்படும் விஷமப்பந்தை எதிர்கொள்ளும் போது காட்டுவது தெறித்தன பெர்பாமன்ஸ்
ரங்கராஜ்பாண்டே தன் சொல்தான் வெல்லும் என்ற கெத்தோடு பேசுவதும், அவர் பெயர் சத்தியமூர்த்தி என்பதும் முஸ்லிம் பெண்ணான ஃபமிதா பானுவை (அதான்அபிராமி வெங்கடாசலம்) அவர் கேள்வி கேட்கும் விதமும் நடைமுறை இந்தியாவின் குறுக்குவெட்டுத் தோற்றம். மத்தபடி தலைவன் ஓரளவு ஓ.கே வா தான் நடிச்சிருக்காரு.
நீரவ்ஷா கேமரா படத்தை சீர்கொண்டு பார்த்திருப்பதால் எல்லா இடத்திலும் நேர்கொண்ட பார்வை வசீகரிக்கிறது. யுவனின் பாட்டை விட பேக்ரவுண்ட் வெயிட்டு. வழக்கம் போல் உமாதேவி அக்கா வரிகள் தேன் துளிகள்.
வித்யாபாலன் என்ற மெகா நடிகையை கொண்டாந்து மெகா சீரியல் மாமியார் மாதிரியும் இல்லாமல் மருமகள் மாதிரியும் இல்லாமல் ஒருமாதிரியாக பயன்படுத்தி படத்தின் அந்த ஏரியாக்களைப் பாடாய்ப் படுத்தியதெல்லாம் ஸ்ஸ்ப்ப்பா.. அந்தப் பிளாஸ்பேக் ஆணி பிடுங்க வேண்டிய ஆணி யுவர்ஹானர்
ஒரிசினல் படத்தில் பயன்படுத்திய வசனங்கள் தான் நிறைய என்றாலும் தமிழுக்குத் தகுந்தாற் போல் அதை நேர்படுத்தி நிறை செய்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத்.
சம்பந்தமே இல்லாமல் கோர்ட்டில் நின்று ஹீரோயிசம் காட்டும் ஹீரோக்களுக்கு மத்தியில் தம்மாத்துண்டு பையன் முன்னாடிலாம் நின்னு சாப்டா பேசுற தலயிசம் இருக்கே..அட அட அட. இறுதி வாதம் வரையிலும் பெண்களுக்கான நியாய மேட்டர்ஸை அஜித் அடுக்கும் விதமும் இதமும் பெண்ணியக்கவிதை.
அடேயப்பா புத்தி சொல்ற படமா? மாஸ் எதுவும் இல்லயா? என ரசிகர்கள் கேட்டுடக் கூடாதுன்னே முன்பாதி முடிவுல ஒரு பைட் சீக்வென்ஸ் இருக்கு. தரமா இருக்கு. கொண்டாடுங்க தலைகளா!!
நீளம் அதிகம் வேகம் குறைவு தான். ஆனா ஆழம் அதிகம். அதுதான் நிறைவு!