50-வது படமும் 2-வது படமும்
கடந்த 2013ம் ஆண்டு இயக்குநர் பாலுமகேந்திராவின் உதவியாளர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, வேலராமமூர்த்தி நடிப்பில் வெளியாகி விமர்சனரீதியாக பெரும் வரவேற்ப்பைப் பெற்றத் திரைப்படம் ‘மதயானைக் கூட்டம்”. இப்படத்தில் தான் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி முதன்முறையாக நடிகராக அறிமுகமானார். தற்போது கிட்டத்தட்ட 50 படத்திற்கும் மேல் அவர் நடித்து முடித்திருக்க, படத்தின் இயக்குநரான விக்ரம் சுகுமாறன் தற்போது தான் தனது இரண்டாவது படத்தை இயக்கத் தொடங்கியிருக்கிறார்.
‘வில் அம்பு’ ‘கென்னடி கிளப்’ ஆகிய படங்களை தயாரித்த நல்லுச்சாமி பிக்சர்ஸ் சார்பாக தாய் சரவணனும், நடிகர் அருள்தாஸும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். “தேரும் போரும்” என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கும் இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஐஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. ஒரு ஊரின் தேர் திருவிழாவை ஒட்டி நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.