Tamil Movie Ads News and Videos Portal

50/50- மினி விமர்சனம்

யோகிபாபுவை போஸ்டரில் பார்த்ததும் ஆர்வத்தில் தியேட்டருக்குள் சென்றால் சற்று ஏமாற்றம் இருக்கும். கூடுமான வரை படம் யோகிபாபு இல்லாமலே தான் கடக்கிறது. அதுவும் பரவாயில்லை தான்.

 

தாதா குழந்தைகள் எனப்படும் மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், யோகிபாபு மூவரையும் தீர்த்துக்கட்ட ஒரு இன்ஸ்பெக்டர் ஹீரோ அண்ட் கோ விற்கு ஒரு அசைன்மெண்ட்-ஐ கொடுக்கிறார். கும்பகோணத்தை தெறிக்க விட்ட தாதாக்கள் எப்படி ஹீரோ வலைக்குள் விழுகிறார்கள் என்பது தான் கதை.

படத்தில் கதையைத் தவிர சொல்வதற்கு பெரிதாக எதுவுமே இல்லை என்பது தான் ஆகப்பெரும் சோகம். இசை, ஒளிப்பதிவு, என எதுவும் கன்வின்சிங்காக இல்லை. திரைக்கதை என்னவிலை என்று கேட்பார்கள்

போல் இருக்கிறது. டப்பிங் சிங்கிலும் அத்தனை குளறுபடி. இருந்தாலும் ஒரு விசயத்தில் ஒரு புது முயற்சியை கையாண்டுள்ளார்கள். அது படத்திற்கு எவ்வளவு கை கொடுக்கும் என்று தெரியவில்லை.

யோகிபாபு உள்பட திரையில் வரும் நடியோ நடி என நடித்துத் தள்ளி இருக்கிறார்கள். ஆத்தீ