Tamil Movie Ads News and Videos Portal

கலை கட்டிய கேந்திர வித்யாலயா பள்ளியின் 45-வது ஆண்டுவிழா

மாணவர்கள் ஒன்றிணையும் பள்ளி&கல்லூரி விழாக்கள் எப்போதுமே மகிழ்ச்சிக்குரியவை. அடையாரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 45-வது ஆண்டுவிழா மிகச்சிறப்பாக நேற்று நடைபெற்றது. விழாவை பிரின்சிபால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்கள். கலை நிகழ்ச்சிகளோடு துவங்கிய இவ்விழா அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச்செல்வங்களுக்கு பரிசளிக்கும் வரை நடைபெற்றது. விழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்தவர், Ex.டைரக்டர் மற்றும் சேர்மன் ஆன சந்திரசேகரன். சிறப்பு விருந்தினராக திருமதி சாந்தி சந்திரசேகரன் கலந்துகொண்டார். மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி கெளரவித்தவர் School எஜுகேஷன் கமிஷ்னர் சிகை தாமஸ் வைத்யன். மேலும் இவ்விழாவில் மாணவர்களோடு சேர்ந்து அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள்