Tamil Movie Ads News and Videos Portal

4 ஆஸ்கர் விருதுகளை வென்ற கொரியத் திரைப்படம்

திரைப்படங்களுக்கு கொடுக்கும் விருதுகளில் மிக உயர்ந்த விருதாக மதிக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான “1917” குவாண்டின் டொரொண்டினோ இயக்கிய Once upon a time in Hollywood, சென்ற மாதம் வெளியாகி வசூல் சாதனை படைத்த ஜோக்கர், கொரியத் திரைப்படம் “Parasite” ஆகிய படங்கள் போட்டியில் இருந்தது.

இதில் சிறந்த திரைப்படம், சிறந்த அயல் மொழித்திரைப்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருதை Parasite திரைப்படம் வென்றிருக்கிறது. இதன் இயக்குநர் Bong Joon ho இதற்கு முன்னர் Memories of Murder போன்ற திரைப்படங்களை இயக்கியவர் ஆவார். “1917” திரைப்படம் சிறந்த விஸ்வல் எஃபெக்ட், சிறந்த ஒலிக்கலவை உள்ளிட்ட மூன்று விருதுகளை வென்றுள்ளது.