கின்னஸ் புத்தகத்தில் தன் பெயரைப் பக்கத்திற்குப் பக்கம் பதிய வைக்கும் ஆர்வம் கொண்டவர் நடிகர் பாபு கணேஷ். சினிமாவில் ஒரே நேரத்தில் எல்லாத்துறைகளிலும் கவனம் செலுத்துவது அவருக்கு கைவந்த கலை. தற்போது அவரை மகனை கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி தயாரித்து இருக்கிறார்.
370 என்ற டைட்டில் கொண்டுள்ள இப்படத்தில்
நாயகனாக பாபுகணேஷின் மகன் ரிஷி காந்தா நடித்துள்ளார். அவரோடு ரிஷா, திருநங்கை நமீதா, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், வெற்றி, பெசன்ட் நகர் ரவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்… இப்படம் 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது