Tamil Movie Ads News and Videos Portal

2019ம் ஆண்டின் 100 நாள் படம் “அசுரன்”

வெற்றிமாறன் தமிழ் இலக்கிய உலகில் பூமணி எழுதிய முக்கிய நாவலான ”வெக்கை” நாவலை அசுரன் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார். தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, கென் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். அக்டோபர் 4ல் வெளியான இப்படம் தற்போது ஜனவரி 11ல் 100 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் என்கின்ற பெருமையை பெற்றிருக்கிறது.

2019ல் தமிழ் சினிமாவில் மொத்தம் 209 படங்கள் வெளியானது. அதில் “அசுரன்” 100 நாட்களைக் கடந்து ஓடும் இரண்டாவது படமாகும், ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவான “கோமாளி” திரைப்படம் 100 நாட்களைக் கடந்த மற்றொரு திரைப்படமாகும். இருப்பினும் விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டப் பெற்ற ஒரே படம் என்ற பெருமையை “அசுரன்” பெற்றிருக்கிறது.