Tamil Movie Ads News and Videos Portal

ஃப்ரீமேசன்ஸ் மூலம் மெட்ராஸ் மாவட்ட கிராண்ட் லாட்ஜ்-ன் கோவிட் 19 நிவாரண முயற்சிகள்

மெட்ராஸ் மாவட்ட கிராண்ட் லாட்ஜ்-ன் கீழ் இயங்கி வரும் சென்னை ஃப்ரீமேசன்ஸ், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு உணவுப் பொட்டலங்களைத் தயாரித்து, விநியோகிப்பதில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உதவ முன்வந்துள்ளது.

திரு. ரவி கேசவன் தலைமையிலான இந்த குழுவினர், மிகவும் சுகாதாரமான முறையில், தங்களது சொந்த முயற்சியில் ஃப்ரீமேசன்களின் மேற்பார்வையில் உணவுகள் வகைகள் தயாரிக்கப்பட்டு, ஒரு நாளைக்கு சுமார் 900-க்கும் மேற்பட்ட பொட்டலங்களாக உருப்பெறுகின்றன.

இந்த திட்டத்திற்கு தனிப்பட்ட ஃப்ரீமேசன்ஸ் மற்றும் மெட்ராஸ் மாவட்ட கிராண்ட் லாட்ஜ-ன் தொண்டு நிறுவனமான மாவட்ட கிராண்ட் தொண்டுநிதி அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது. மார்ச் 25ம் தேதி தொடங்கிய இத்திட்டம் ஏப்ரல் மாத இறுதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கிராண்ட் தொண்டுநிதி அறக்கட்டளை, போலீஸ் பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 400 பிபிஇ கிட்டுகளையும் விநியோகிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கிட்டும் 6 துவைக்கக்கூடிய பருத்தி முகமூடிகள் மற்றும் 3 ஜோடி ரப்பர் கையுறைகளை உள்ளடக்கியது.

முதல் 100 கிட்டுகள் ஏற்கனவே பணியாளர்களுக்கு விநியோகிப்பதற்காக காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்து இருக்கிறது.