Tamil Movie Ads News and Videos Portal

அவதார் அலையிலும் எதிர்நீச்சல் போடும் 181!

ஒரு கலைஞன் தனிப்பெருங்கலைஞனாக வெளிப்பட வேண்டுமானால் அவனிடம் தனித்துவம் இருக்க வேண்டும். அந்த வகையில் முகம்மது இஷாக் தனித்துவம் பெற்ற கலைஞன் எனலாம். அவர் தனது முதல்படத்திலே பெரும் சாதனையை நிகழ்த்தியவர். யெஸ் அகடம் என்ற திரைப்படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்து கின்னஸ் சாதனை புரிந்தவர் இஷாக். அவரது அடுத்தபடமான நாகேஷ் திரையரங்கம் படத்தில் அநாதை குழந்தைகளின் ரத்தத்தில் இருந்து ப்ளாஸ்மாவை எடுத்து அதை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் கொடூர நிகழ்வை பதிவு செய்திருந்தார். அப்படியொரு செய்தியை திரையுலகமும் தமிழகமும் நாகேஷ் திரையரங்கம் படம் வெளியாகும் வரை அறிந்ததில்லை. தற்போது முகம்மது இஷாக்கின் அடுத்த படமான 181 படம் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் திரைக்கதையை வெறும் 18 மணி நேரத்தில் எழுதி சாதனை புரிந்த இஷாக், படத்தையும் தரமாக எடுத்திருக்கிறார் என்பதை படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் மூலமாக உணர முடிகிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையப்படுத்தி கதை எழுதியுள்ள இஷாக் இப்படத்தை ஹாரர் திரில்லர் எபெக்டில் ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். இன்று நாடெங்கும் அவதார் அலை வீசினாலும் 181 படம் காத்திரமான கதையாலும் திரை ஆக்கத்தாலும் அவதாருக்கு அலையிலும் எதிர்நீச்சல் போட்டு பயணிக்கிறது. சமூக நலன் சார்ந்த இப்படியான படங்களை கொண்டாடுவதும், மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதும் நம் கடமை. கடமையைச் செய்வோம்..Must watch in theatre 181