Tamil Movie Ads News and Videos Portal

சூர்யாவுடன் வானில் பறக்கும் 100 மாணவர்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தின் ”வெய்யோன் சில்லி” என்ற பாடலை ஸ்பைஸ் ஜெட் போயிங் 737 வகை விமானத்தில் வரும் பிப்ரவரி 13 அன்று வெளியிடவிருக்கிறார்கள். இத்தகவலை இப்படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தான் பிராண்டிங் செய்து வருகிறது.

இந்நிறுவனத்தின் சேர்மன் ஆன அஜய் சிங் பிப்ரவரி 13 அன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவிருக்கிறார். ‘வெய்யோன் சில்லி’ பாடலை வெளியிடுவதற்காக ‘சூரரைப் போற்று’ படக்குழுவுடன் சேர்ந்து அகரம் அறக்கட்டளை அமைப்பை சேர்ந்த 100 மாணவர்களும் நடிகர் சூர்யாவுடன் ஸ்பைஸ் ஜெட் போயிங் 737 வகை விமானத்தில் பறக்கவிருக்கிறார்கள். இதில் அபர்ணா பாலமுரளி சூர்யாவுக்கு நாயகியாக நடித்திருக்கிறார். 2 D எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக சூர்யா இப்படத்தினை தயாரித்துள்ளார்.