Tamil Movie Ads News and Videos Portal

”விஷால் சேட்டிலைட்டிலிருந்து குதிக்க மட்டும் 100 கோடி வேண்டும்” – மிஷ்கின்

தமிழ் சினிமா உலகில் அதிரடிக்கு பெயர் போனவர் இயக்குநர் மிஷ்கின். சமீபத்தில் இவர் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘சைக்கோ’ திரைப்படம் பல சர்ச்சைகளை எழுப்பியது. மேலும் சில தினங்களுக்கு முன்னர் தேசிய விருது பெற்ற திரைப்படமான ‘பாரம்’ திரைப்படத்திற்கு தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டி பரபரப்பைக் கிளப்பினார். தற்போது இவர் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வந்த துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து மிஷ்கினை நீக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஷால் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. அந்த படப்பிடிப்பு திட்டமிட்டபடி செல்லாததால் விஷால் தரப்பிற்கு பண விரயம் ஏற்பட்டதாகவும், படத்தை முடிக்க, பேசப்பட்ட தொகையை விட 40 கோடி அதிக பணத்தை மிஷ்கின் கேட்பதாகவும் காரணம் கூறப்பட்டது. இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக மிஷ்கின், “நான் அதிகமாக 40 கோடி கேட்கவில்லை. 400 கோடி கேட்டேன். ஏனென்றால் விஷால் சேட்டிலைட்டில் இருந்து குதிப்பதாக ஒரு காட்சி இருக்கிறது. அதற்கே 100 கோடி தேவை. அதனால் தான் 400 கோடி கேட்டேன்..” என்று கிண்டலாக பதில் கூறியுள்ளார். துப்பறிவாளன் படத்தின் மீதிக்காட்சிகளை தானே இயக்கப் போவதாக விஷால் தெரிவித்துள்ளார்.