Tamil Movie Ads News and Videos Portal

1 ரூபாயில் அம்மாவை மிஞ்சிய ரோஜா

நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பல மக்கள் தங்களுக்கான உணவு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளான நகரி மற்றும் புத்தூர் பகுதிகளில் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இப்படி பலரும் உணவின்றி தவிப்பதை அறிந்த நகரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவான நடிகை ரோஜா அவர்களின் துயரினைப் போக்க, நான்கு ரூபாயில் தரமான சாப்பாடை வழங்கி வருகிறார். இது குறித்து நடிகை ரோஜா கூறியிருப்பதாவது, “மக்கள், மருத்துவர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உணவு இன்றி தவிப்பதைப் பார்த்து அவர்களுக்கு உதவ முடிவு செய்தேன். எனது அதிகாரத்தின் கீழ் இயங்கும் சாரிடபிள் ட்ரெஸ்ட் மூலமாக முதலில் குறிப்பிட்ட அளவில் உணவு தயாரித்து வழங்கினோம். தற்போது தேவை அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு சமையற்கூடத்தை விரிவுபடுத்தி தினமும் 5000 சாப்பாடுகளை தயாரிக்கிறோம். 4 ரூபாய்க்கு தரமான சாப்பாடு கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்ற அசாதாரணமான சூழலில் பெரும் பணக்காரர்கள் மக்களின் பசியாற்ற முன்வர வேண்டும்.’ என்று அவர் கூறியுள்ளார். தமிழக அரசியலில் 5 ரூபாய்க்கு உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்திய முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவையும் ஒரு ரூபாயில் மிஞ்சிவிட்டார் என்று நகரி வட்டார மக்கள் வாயார தங்கள் எம்.எல்.ஏவை வாழ்த்தி வணங்குகிறார்கள்.