“வேலை மீது காட்டும் மரியாதையை வேலை செய்பவர்கள் மீதும் காட்டுங்கள்” – நடிகர் அரீஷ்குமார்
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது இந்த ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்..
கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர்.
இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பெண் காவலர்களை பற்றி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கும் மிக மிக அவசரம் படம் அவற்றில் இருந்து தனித்து நிற்கும் விதமாக வெளியாகியுள்ளது.
அதனால்தான் ரசிகர்களின், குறிப்பாக தாய்மார்களின் ஆதரவு இந்தப்படத்திற்கு பெரிய அளவில் கிடைத்துள்ளது.
படத்தில் நாயகன் அரீஷ்குமார் இந்த படம் பற்றி கூறும்போது,
“பெண்கள் முன்னேற்றம் பற்றி நிறைய பேசுகிறோம்..
ஆனால் அதை நடைமுறைப்படுத்துகிறோமா என்றால் இல்லை என்றுதான் சொலவேண்டும்..
காரணம் மிகக்குறைந்த அளவிலேயே அதற்கான முயற்சிகள் இருக்கின்றன.
பெண்கள் முன்னேற்றம் என்று கூறிக்கொண்டே, அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்குகிறோம் என்கிற பெயரில், கூடவே சேர்த்து டார்ச்சரையும் அல்லவா கொடுத்து வருகிறோம்..?
அதேபோல பெண்கள் முன்னேற்றம் பற்றி இதுவரை வந்த திரைப்படங்களில் அவர்கள் இப்படி கஷ்டப்பட்டார்கள், இப்படி போராடினார்கள்….வெற்றி பெற்றார்கள் என்றுதான் காட்டியிருக்கிறார்கள்.
ஆனால் முதன்முதலாக நடைமுறையில் ஒரு பெண் தான் பணிபுரியும் துறையில் எவ்வளவு சிரமப்படுகிறாள் என்பதை இது மிக மிக அவசரம் திரைப்படம் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருக்கிறது.
பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் போலீசார் அந்த பணியை மேற்கொள்கின்றனர
அவ்வளவு ஏன், காக்கி உடையில் இருக்கும் பெண்ணையும் கூட சிலர் ஆபாசமாக பார்க்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்..
வேலை மீது காட்டும் மரியாதையை வேலை செய்பவர்கள் மீதும் காட்டுங்கள் என இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் எனக்கு ரொம்பவே பிடித்தது.. நாம் நடிக்கிற படம் ஓடுகிறதோ இல்லையோ ஓடுகிற படத்தில் நாம் இருக்க வேண்டும் என்பது என்னுடைய பாலிசி.. அந்த வகையில் இந்த மிக மிக அவசரம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை” என்று கூறியுள்ளார்.
ரவீந்தர் சந்திரசேகரனின் லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது.