Tamil Movie Ads News and Videos Portal

வானம் கொட்டட்டும்’ படத்தின் டைட்டில் முதல் பார்வை இன்று மாலை வெளியீடு.

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் & லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன்,
சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலர் நடிக்க தனா இயக்குகிறார். இப்படத்திற்கு சித் ஸ்ரீராம் இசையமைக்கிறார்.

சென்னை, திருநெல்வேலி, குற்றாலம் மற்றும் தமிழ்நாட்டின் தென் பகுதிகள் போன்றவற்றில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டைட்டில் முதல் பார்வை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதல் பாடல், இரண்டாவது பாடல், டீஸர், டிரைலர் & இசை வெளியீடு ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும். இறுதி கட்ட பணிகள் முடிந்து 2020 ஜனவரியில் இப்படம் வெளியிடப்படும்.