வெளியில் இருந்து ஆயிரம் வினை வந்தாலும் நட்போட துணை இருந்தால் அடிச்சி அந்தர் மாஸ் பண்ணிடலாம் என்ற ஊக்கத்தை உந்து சக்தியாக்கி வந்திருக்கிறது நட்பே துணை.
அயல் நாட்டுக்காரனோட ஹாக்கி விளையாண்டு தங்கள் உரிமையாக்கிய ஹாக்கி கிரவுண்டை வெளிநாட்டு கம்பெனிக்கு தாரைவார்க்க முடிவு பண்ற கரு.பழனியப்பனை எதிர்த்து நிற்கிறது ஹிப்ஹாப் ஆதி படை. மீதி என்னாச்சி என்பது தான் பாதி வெந்தும் வேகாமலும் நகரும் கதை.
ஹாக்கி ப்ளேயருக்கான உடல்மொழி ஆதிக்கு செமயாக கை கொடுத்திருக்கிறது. செண்டிமெண்ட் காட்சிகளில் தான் ஹாக்கி ப்ளேயருக்கு கால் தடுமாறிடுது. கரு.பழனியப்பன் பேசினாலே தியேட்டர்ல விசில் பறக்குது. கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார்னு தெரிஞ்சி தாம்யா சொன்னேன்..அப்போம் தான நீங்கள் கிண்டல் பண்ணியாவது செய்தியைப் போடுவீங்க” என்று போகிற போக்கில் பொடனியிலே போடுகிறார். ஒரு இடத்தில் சின்னச்செய்தி சேனல்களை வறுத்தெடுத்து வகுப்பெடுக்கிறார். என்ன வன்மமோ தெரியவில்லை.
ஆர்.ஜே விக்னேஷ் சகிதம் காமெடி லிஸ்டர்களில் யாரும் பெஸ்ட்டை கொடுக்காவிட்டாலும் வொர்ஸ்டாக இல்லை.
ஆமா ஹீரோயின்? பாவம் பொண்ணு ஐ.பில் மேட்ச்ல பால் எடுத்துப் போடுற பொண்ணு மாதிரி பார்க்க அழகா இருக்கு. நடிப்பும் அளவா வருது. அடுத்தப் படத்துல வெளுத்து வாங்கு தாயி.
படம் முதல்காட்சியிலே கதைக்குள்ள போயிடுது. ஹீரோ கதைக்குள் வரும்போது இடைவேளையே வந்திடுது. பர்ஸ்ட்ஹாபில் இதான் பிரச்சனை. நல்லநேரம் இரண்டாம் பாதி அந்தமாதிரியான இக்கட்டைத் தரவில்லை. கொஞ்சமே கொஞ்சம் ஒட்டுற அந்தப் பளேஷ்பேக் தவிர்த்து படம் பட்டாசாக பாய்கிறது. குறிப்பாக க்ளைமாக்ஸ் ஹாக்கி விளையாட்டை படமாக்கிய விதம் ஆசம்.
கேமராமேனுக்கு ஹீரோ ஹிப்ஹாப் ரொம்ப தோஸ்த் போல. மனுசன் கைக்கு ஒரு ஷாட்டு, காலுக்கு ஒரு ஷாட்டுன்னு சாத்து சாத்துன்னு சாத்தி இருக்கார். ஆனா அழகாத்தான் இருக்கு. பாட்டும் பேக்ரவுண்ட் மியூசிக்கும் கனகச்சிதம்.
ஆர்.ஜே விக்னேஷுக்கு ப்ளாஸ்பேக்ல கால் போயிடுது. அப்புறம் பார்த்தா கிரவுண்ட்ல அசால்டா நிக்கிறார். ப்ளாஸ்பேக்னா முன்னாடி நடந்தது தானே? ஒரே டவுட்டு.
அம்மாம் பெரிய பெர்பெக்ட் கோச்-க்கு எப்படி இண்டெர்நேஷ்னல் ப்ளேயரைப் பத்தி தெரியாம இருக்கும்?
மல்டிநேஷ்னல் கம்பெனி ஆளுக்க எதோ மளிகை கடைக்கு மண்டலோம் வாங்க வந்தவிய்ங்க மாதிரி மந்திரிட்ட பேசிட்டு இருக்காங்க. இந்தமாதிரியான சில சில்லண்டிகளை தவிர்த்து இருந்தால் படம் அசூரப் பாய்ச்சலில் பாய்ந்திருக்கும். இருந்தாலும் ஹிப்ஹாப் ஆதிக்கு இன்னொரு ஆவ்ரேஜ் ஹிட்டு தான். மீசையை முறுக்கிக்கலாம்.