Tamil Movie Ads News and Videos Portal

டி.ப்ளாக்- விமர்சனம்

மர்மம் சார்ந்த கதைகள் தற்போது வெகுவாக ரசிக்கப்பட்டு வரும் சூழலில் டி.ப்ளாக் படமும் மர்மம் திகில் கலந்த பின்னணியில் வெளியாகியுள்ளது

அருள்நிதி படிக்கும் கல்லூரியில் சில Students மர்மம் ஆகிறார்கள். கொலையுண்டும் போகிறார்கள். அதற்கான காரணமும் தீர்வும் தான் படத்தின் கதை.

அருள்நிதி கதை தேர்வைப் போலவே தன் நடிப்பிலும் மெனக்கெடுபவர். இந்தப்படத்திலும் அவரது நல் உழைப்பைக் கொடுத்திருக்கிறார். அவந்திகா நடிப்பும் ஓ.கே ரகம். காமெடி படத்தில் பெரிதாக எடுபடவில்லை

படத்தின் மேக்கிங்கில் தரம் இருப்பது மறுப்பதற்கில்லை. கூடவே இசை அமைப்பாளரும் திரில்லர் கதைக்கான வெயிட்டேஜை இசையின் வழியே வழங்க முயற்சித்திருக்கிறார். ஒளிப்பதிவாளரும் தன் பங்கைச் செவ்வனே செய்துள்ளார்.

படத்தின் கதை எதுவாக இருந்தாலும்..ஏன் சற்று வீக்காக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் திரைக்கதை ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும். டி.ப்ளாக் அந்த இடத்தில் சின்னதாக கோட்டை விட்டுள்ளது. இன்னும் சற்று முயற்சித்திருந்தால் டி.ப்ளாக் எல்லா ப்ளாக்கிலும் பேசப்பட்டிருக்கும்
2.75/5

-மு.ஜெகன் கவிராஜ்