Tamil Movie Ads News and Videos Portal

சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்

செல்லரிச்சுப் போன கதைகளுக்கு மத்தியில் கமர்சியல் இருந்தாலும் நம்மை புல்லரிக்க வைக்குற வித்தை இயக்குநர் சசிக்கு உண்டு. சிவப்பு மஞ்சள் பச்சையிலும் அது தப்பவில்லை

அக்கா மீது உயிரையே வைத்துள்ள பொறுப்பில்லாத பைக்ரேசர் தம்பி ஜீவி. தம்பி மீது ‘அம்மா’ம் பெரிய பாசங்கொண்ட அக்கா லிஜோமோல் ரோஸ். ஸ்ட்ரிக்ட்டான டிராபிஃக் போலீஸ் சித்தார்த்திடம் தம்பி ஜீவி வம்பாக மாட்டுகிறார். அக்கா லிஜோமோல் அன்பாக மாட்டுகிறார். இவர்களுக்குள் நடக்கும் எமோஷ்னல், மாஸ், காமெடி எல்லாம் தான் சிவப்பு மஞ்சள் பச்சை.
துருப்பிடித்த விஜய் ஆண்டனி வண்டியையே ஸ்குரு போட்டு ஓட வைத்தவர் சசி. அதனால் இனி சித்தார்த்தும், ஜீவி பிரகாஷும் கொஞ்சநாளைக்கு கோடம்பாக்கத்துல காலரைத் தூக்கிவிட்டுக்கலாம். ரீசன் என்னன்னா படம் Sure- ஆ ஹிட்டடிக்கும்

விறைப்பா நிற்கும் போதும், வில்லன்ட (அந்த வில்லன் தேவையற்ற ஆணி என்பது வேறு விசயம்) கெத்தா பேசும்போதும், மனைவிட்ட காதலா உருகும் போதும், மச்சானிடம் வீம்புக்கு உரசும் போதும், அசரடிக்கிறார் சித்தார்த். இந்த விசயங்களை அப்படியே ஜீவிக்கும் சொல்லலாம். அக்காப் பாசத்தில் வெடிக்கும் போதும், தன் மனசாட்சியை தானே அடிக்கும் போதும் நடிப்புல ஓரளவு தேறுறார். இவங்களை எல்லாம் “ஓரமா நின்னு விளையாடுங்கப்பா” என்ற ரேஞ்சில் ஓவர்டேக் பண்றது லிஜோமோல் ரோஸ் தான். அடடா!!! கண்ணு தான் நடிக்குதுன்னா அதுல இருந்து வர்ற கண்ணீர் துளியும் நடிக்குதய்யா. ஜீவி பிரகாஷ் காதலியா வர்ற பொண்ணும் பிரமாதம்

பைக் ரேஸ்ன்ற ஏரியாவை CG-ல எடுக்கணும்னு முடிவு பண்ணிட்டு இவ்ளோ சீப்பா எடுத்துருக்க வேண்டாம். படம் முடிஞ்ச பிறகு வர்ற ஒரு எக்ஸ்ட்ரா க்ளைமாக்ஸும் துருத்துது. இந்த இரண்டு மேட்டரையும் தவிர்த்திட்டா படத்தை பெருசா குறையாடிட முடியாது.

மச்சான் என்பது வெறும் உறவுமுறை வார்த்தை அல்ல. அதுக்குப் பின்னாடி நம்ம உயிர்வரை நெஞ்சில வர்ற அக்காவோட நேசமும் கலந்து இருக்கு என்பதை படம் உணர்த்துது. ஒரு நாட்டோட லட்சணத்தை ரோடு சொல்லிடும்னு புத்தரின் மறுபெயர் கொண்டவர் பேசும்போது தியேட்டர்ல நல்ல ரெஸ்பான்ஸ். எல்லா வசனங்களும் கூர்மையா இருக்கு.

அம்மா அப்பா இல்லாத அக்கா தம்பிகளுக்கு இயல்பாவே ஒருத்தர் மீதான பேரன்பும் உரிமையும் அதிகமா இருக்கும். அது இதுல இருக்கு. அதைமாதிரி நம் அப்பாவுடன் பிறந்த அத்தைகளுக்கு அவர்களின் அண்ணன் தம்பி மகன்கள் மகள்கள் மேல் கொத்து கொத்தாக பாசம் இருக்கும். அதை இப்படத்தில் காட்சி படத்தியிருக்கும் இடங்கள் எல்லாம் உணர்வியல் மாஸ். நிச்சயம் கர்ச்சீப் தேவைப்படும். ஜீவிய போலீஸ் பிடிச்சிட்டுப் போகும்போது அந்த வயசான அத்தை பஸ்ல இருந்து இறங்கி ஓடிவரும் வருவாங்க..அப்ப கண்ணுல கண்ணீரு லைட்டா கூடி வரத்தான் செய்யுது.

பல கமர்சியல் சமரசங்கள் இருந்தாலும் படம் உறவியல் விசயங்களை அழுத்தமா பேசுது. மேலும்,
“ஆம்பளை நைட்டி போட்டா அது கேவலம்னு நினைக்கிற உனக்குள்ள தான்டா அழுக்கு இருக்கு”ன்னு ஹீரோட்ட அவுரு அம்மா கேட்கிறது சும்மா நறுக்குன்னு இருக்கு.

/ஆம்பளை சட்டையைப் பொம்பளைப் போட்றது கெத்துன்னா பொம்பளை ட்ரஸை ஆம்பளை போட்றது எப்படி அசிங்கமாகுங்குறேன்? /
இசையை விட நம் நண்பர் மோகன்ராஜன் எழுதிய வரிகள் ரொம்ப நல்லாருக்கு. அந்த வரிகளை கேட்க விட்டதற்காக இசையும் நல்லாருக்கு.

அவசரம்னு விதிகளை மீறி ட்ராவல் பண்றது சாலைப் போக்குவரத்திற்கு நல்லது கிடையாது.

அதிக அன்பு காட்றோம்ங்கிற பேர்ல பெண்களை அடக்கி ஆள்றது வாழ்க்கை போக்குவரத்திற்கும் நல்லது கிடையாது.
இதான் படம். நம்பி போகலாம் இந்த வீக் என்ட் வீக்கான என்டா இருக்காது