Tamil Movie Ads News and Videos Portal

சிம்புவிற்கு வில்லனாக ”நான் ஈ” சுதிப்

’மிகமிக அவசரம்’ படத்தை தயாரித்து இயக்கிய சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாவதாக இருந்த திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்க, சிம்பு நாயகனாக நடிக்கவிருந்த இப்படத்தை சிம்புவின் சில செயல்பாடுகளால் தான் கைவிடுவதாக சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இதனையடுத்து வெங்கட் பிரபுவும் வெஃப் சீரிஸ் ஒன்றை இயக்கச்

சென்றுவிட்டார். தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சிம்பு ஆகிய இருவருக்குமான மனக்கசப்புகள் களையப்பட்ட நிலையில் மீண்டும் “மாநாடு” திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார்கள். இப்படத்தில் சிம்புவிற்கு இணையான மற்றொரு நெகட்டிவ் கதாபாத்திரம் ஒன்று இருக்கிறது. இக்கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அரவிந்தசாமியை படக்குழுவினர் அணுகினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். எனவே தற்போது இக்கதாபாத்திரத்தில் ‘நான் ஈ’ ‘புலி’ ஆகியப் படங்களில் வில்லனாக நடித்த சுதிப் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது