Tamil Movie Ads News and Videos Portal

கொரில்லா விமர்சனம்

ஜீவாவிற்கு எப்போதாம்பா நல்லகாலம் வரும்?

இந்த விவசாயிகளை எப்போதாம்பா இந்தச் சினிமாக்காரங்க விடுவாங்க?

“இடுப்பக் காட்டும்மா. அட ஊசிப்போடத்தான்” இந்தமாதிரி அபத்த வசனங்கள் எப்போ தான் மாறும்?

களவு தப்பில்லன்னு சொல்லிட்டு துப்பு கெட்டத்தனமா மக்களையும் அடுத்தவன் காசைப் பொறுக்க வைக்கிற கொடுமைக் காட்சிகளை எப்படி பாஸ் யோசிக்க முடியிறது?

பிராடு பண்றவன்னு தெரிஞ்சும் நீதான் என் நெஞ்சு தலையணை பஞ்சுன்னு லவ்வுகிற ஹீரோயினை எப்பதாம்பா ஒழிச்சிக் கட்டுவீங்க?

யோகிபாபு பேசினாலே சிரிப்புன்னு நம்புற கூட்டம் இன்னும் எவ்வளவு நாள் தமிழ்சினிமாவில் இருக்கும்?

ஒருத்தன் உடம்பை குறைச் சொல்லியும் அசிங்கப்படுத்தியும் சிரிக்கும் அபத்தம் எப்ப மாறும்?

முஸ்லீமா பிறந்தும் தற்கொலை பண்ணிக்கிறேன்னா என் நிலைமையைப் பாத்தியா?ன்னு கதைக்கு ஒட்டவே ஒட்டாத விசயத்தை திணிச்சி ஏன் அவங்களைப் புண் படுத்தி படம் பார்க்குறவன் கண்ணையும் புண்ணாக்குறீங்க?

சாலினி பாண்டே எனும் நடிகையை விட அந்த வெளிநாட்டுக் குரங்கை அதிக நேரம் திரையில் காட்ட எப்படி மனசு வந்தது?

சதிஷ் ஒரு காமெடி நடிகர் என்ற கொடூர அங்கீகாரத்தை அவரிடம் இருந்து எப்போது பறிப்பீர்கள்?

சாம்.சி எஸ்ஸின் உழைப்பை இன்னும் எத்தனை படங்களில் அலைக்கழிப்பீர்கள்?

நீங்க மெய்யாலுமே வலிக்கிற மாதிரி பொய்யாக விவசாயம் நமது உயிர் என்றதும் ரசிகன் சீட்டின் நுனிக்கே வந்துவிடுவான் என்று எந்த தைரியத்தில் நம்புகிறீர்கள்?

விமர்சனமான்னு கேட்டா பதில் இல்லை. விமர்சனத்திற்கு பதிலா தான் இத்தனை கேள்விகளும்!

பின்பாதில எதோ கொஞ்சம் ஐடியாக்களைப் பிச்சுப் போட்டு கிச்சுகிச்சு மூட்டலன்னா மொத்தமா மூட்டை கட்ட வேண்டியதிருக்கும். யாராவது ஒரு நல்ல மனுசன் வாங்கய்யா கற்றது தமிழ், ஈ படங்கள் மூலமாக நம்மை ஈர்த்த மகா நடிகனான ஜீவாவை காப்பாற்ற!