எழுத்துல உள்ள அழுத்தத்தை திரையில கொண்டு வாரதிற்கு ஒரு அசாத்திய திறமை வேணும். கிட்டத்தட்ட வெற்றிமாறனுக்கு அடுத்து அதை வெற்றிகரமா கொண்டு வரக்கூடிய இயக்குநரா இனி லோகேஷ் கனகராஜ் அறியப்படுவார்.
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குமான ரைட்டிங்கில் அவ்வளவு நேர்த்தி. லைட்டா பிசிறு தட்டினாலும் பருத்திவீரன் கார்த்தி தெரிந்துவிடுவார். அதை அறவே தவிர்த்து அவருக்கான பாத்திரத்தை வடிவமைத்துள்ளார் இயக்குநர். அக்கதாப்பாத்திரத்திற்கு இம்மி அளவும் அநீதி இழைக்காமல் அசத்தி இருக்கிறார் கார்த்தி.
போதை மாபியாவிற்கும் போலீஸுக்கும் நடக்கும் ஒரு அசுர யுத்தத்தில் ஒரு கைதியான கார்த்தி போலிஸுக்கு உதவுகிறார். அந்த உதவிக்கு அவர் பதில் கேட்கும் உதவி தாய்மைக்கவிதை.
படம் முழுதும் இருட்டு தான். ஆனால் ரசிகனின் மனதில் அப்படியொரு வெளிச்சம். நாலு மணி நேரத்தில் நடக்கும் கதையில் துளியளவும் சலிப்பு ஏற்படவில்லை
குத்துப்பாட்டு இல்லை, நாயகனுக்கு ஒரேயொரு காஸ்ட்யூம் தான், நாயகி இல்லை, யோகிபாபு இல்லை இப்படியான இல்லைகள் இருந்தும் படத்தை உள்வாங்குவதில் நமக்கு ஒரு தொல்லையும் இல்லை. இந்த ஒரு மேட்டர் தான் கைதி முன் நம்மை சரண்டர் ஆக்குகிறது.
படத்தில் நரேன், தீனா, ஹரிஸ் உத்தமன், உள்ளிட்ட கிள்ளுகீரை சைசில் வரும் கேரக்டர்கள் கூட வெறித்தனமாக நடித்துள்ளனர். தீபாவளிக்கு பிகில் போட்டுப் பார்க்கக் கூடிய படமாக கைதி வந்துள்ளது. சினிமா ஆர்வலர்களை தாண்டி கமர்சியல் ஆடியன்ஸை இந்தப்படம் எந்தளவுக்கு ஈர்க்கிறது என்பதை பொறுத்து தான் தமிழ்சினிமாவின் அடுத்தக் கட்டப்பாய்ச்சல் இருக்கிறது.
சின்ன சறுக்கல் என்னன்னா
குடும்பமா தியேட்டர்க்குப் போறவங்களுக்கு ஒரு செலிப்ரேஷன் மூட் கிடைக்காது.