காம உணர்வை தூண்டுறேன்ற பேர்ல கோவத்தை கிளப்புறாரு எஸ்.ஏ சி.
ஹீரோயினோட கவுட்டைக்கு கீழ ஷாட் வச்சா நம்ம குனிஞ்சி கிடந்து பார்த்து ஆஹா இதுவல்லவா படைப்புன்னு கொண்டாடுவோம்னு அவருக்கு யார்யா சொன்னா? எவ்ளோ கேவலமான கற்பனை.
நாயகன் ஜெய் ட்ரைன்ல போகும்போது ஹீரோயினுக்கு சரக்கு கொடுத்து மேட்டர்-ஐ முடிக்கிறார். ஹீரோயினும் சரக்கு கொடுத்ததும் தன்னை தாராளமாக கொடுத்து விடுகிறார். எழவு.. ஸாரி பிறவு ரெண்டு வருசம் கழித்து இருவரும் எதார்த்தமா மீட் பண்ணி பதார்த்தமா கல்யாணம் பண்ணிருக்கிறாங்க. இந்தக் கேப்ல அதுல்யாரவி ஜெய்யை ஆட்டையைப் போட நினைக்கிறார். அதுல்யாரவி இனி ஊருக்கு கிளம்ப தயாராக வேண்டியது தான். போனவாரம் தான் அடுத்தச்சாட்டையில பெண் சமுத்திரக்கனியா மாறி இந்தப்பொண்ணு அவ்ளோ க்ளாஸ் எடுத்தது. இந்தப்படத்துல க்ளாஸை கையில் எடுத்துக்கிட்டு எப்போதும் ஏக்கத்தோடே சுத்துது. ஏன்மா ஏன்??
அடல்ட் காமெடி என்பதன் அர்த்தம் சட்டம் ஒரு இருட்டறை என்று படமெடுத்த இயக்குநருக்கு தெரியாமல் போனது நம்ம துரதிருஷ்டம்.
படத்தில் காமெடி என்ற பெயரில் சீனுக்கு சீன் அபத்தத்தை அள்ளி வைத்திருக்கிறார். ரசிகன் படத்தில் ஹீரோவுக்கு மாமியாருக்கு சோப்பு போடுவதை கற்றுக்கொடுத்தவர் இந்தப்படத்தில் ஒரு பையன் மூன்று பெண்களைத் தள்ளிட்டுப் போவதில் தவறே இல்லை என்கிறார். விஜய் ஒரு விரல் புரட்சி செய்ய, இவர் வேறோர் புரட்சியில் இறங்கிட்டார் போல..
ஆசான் வேணுஜி சார் சொல்றாரு ..இந்தப் படம் ஜெயிச்சா தான் அடுத்தப் படம் எடுப்பதை நிப்பாட்டுவாராம் எஸ்.ஏ சி. அதனால அவர் இனி படமெடுக்காம இருக்க மக்கள் தயவுசெய்து படத்தை ஜெயிக்க வைச்சிடுங்கன்னு.
எனக்கு என்ன பயம்னா இந்தப்படத்தை ஜெயிக்க வச்சிட்டோம்னா அடுத்து கெளதம் கார்த்திட்ட கால்ஷீட் வாங்கிட்டு வந்துடுவாரே.