லேட்டா வந்தாலும் தோட்டா பெருசா சோடை போகவில்லை என்பது முதல் ஆறுதல். தயவுசெய்து இனிமேல் கெளதம்வாசுதேவ் மேனன் வாய்ஸ் ஓவர் கொடுக்கக் கூடாது என்பது முதல் வேண்டுகோள். டைட்டிலுக்கு முன்பாக வரும் அவரது குரல் தனுஷ் வாய்வழியாக படம் நெடுக வந்து ஒருவித சலிப்பை ஏற்படுத்துவது…ஸ்ஸ்ஸ்ப்பா
கல்லூரியில் படிக்கும் தனுஷுக்கு அண்ணன் என்றால் பிடிக்கும். ஆனால் அண்ணன் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டார். விருப்பம் இல்லாமல் சினிமாவில் நடிக்கும் மேகா ஆகாஷையும் தனுஷுக்குப் பிடிக்க..காதல் எபிசோட்ஸ் ஸ்டார்ட். காதலுக்கு அடுத்து பிரிவு. நான்காண்டு கழித்து மேகா சசிகுமாரோடு இருந்துகொண்டு, “என்னை உங்கண்ணன் காப்பாத்துனாப்ல. இப்ப உங்கண்ணனை காப்பாத்த நீ வரணும்” எனச் சொல்ல..தனுஷ் செல்ல..அவரை நோக்கிப் பாயும் தோட்டாக்களை எப்படி சமாளித்தார்…என்பது தான் டமால் டமால்..
கெளதம் வாசுதேவ்மேனனை சும்மா சொல்லக்கூடாது. நறுக்குத் தெறித்தாற்போல திரைக்கதை. கொஞ்சம் லென்த்து என்றாலும் சலிப்பேற்படாத முன்பாதி சூப்பரு..பின்பாதியில் பாதை சறுக்கி சறுக்கி போனாலும் இலக்கு தெளிவாக இருந்ததால் முடியும் போது ஓர் நிறைவு கிடைத்தது.
படத்தில் கல்லூரி மாணவனாக தனுஷ். பார்க்க அவ்ளோ அழகாக இருக்கார். மனுசன் ஸ்கூல் பையனா நடிச்சா கூட நம்பலாம். அவ்ளோ கெத்து. மேலும் கண்களால் நடிக்கும் போதும் கன் வைத்து வெடிக்கும் போதும் மிரட்டுகிறார் இந்த அசுரன். மேகா ஆகாஷ் வாவ்…அழகை ரசிப்பதா…நடிப்பை ரசிப்பதா..நாலு வருசத்துக்கு முன்னாடி பொண்ணு என்னா அழகா இருந்திருக்கு.
படத்தின் மற்றொரு ஹீரோ இசை அமைப்பாளர் தர்புகா சிவா. பின்னணி இசை கதை சொல்கிறது. கவிஞர் தாமரை வரிகளில் வழக்கம் போல் தமிழிசம். தமிழகத்தில் இந்த தாமரை மட்டும் மலர்ந்தே இருக்கும். படத்திற்குப் படம் அவர் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது.
புரொடக்சனில் ரொம்ப கஷ்டப்பட்டாலும் படத்தின் மேக்கிங்கில் எந்தச்சமரசமும் இல்லாமல் படம் எடுத்திருக்கிறார் கெளதம். லாஜிக் என்ற விசயத்தை ஆராய்ந்தால் இந்தத் தோட்டா நம்மை நோக்கித் தான் பாயும். அதைக் கண்டும் காணாமல் விட்டால் நிச்சயம் ஒரு தரமான சம்பவம் தான். பயப்படாம தியேட்டருக்குள் செல்லுங்கள் #அச்சம் என்பது மடமை அல்லவா