Tamil Movie Ads News and Videos Portal

ஆடை விமர்சனம்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த மார்பக வரி மேட்டர்ல இருந்து படம் துவங்கியதும் ஒரு உணர்வு சர்ர்ர்ர்னு மேல ஏறிச்சிது. ஏன்னா நமக்கு முந்தைய தலைமுறைகள் அதையெல்லாம் அனுபவிச்சி இருக்காங்க. சில பாட்டிகள் அக்கதைகளை வாய்மொழியா சொல்லக் கேட்டு மனசு வலிச்சி கிடந்திருக்கோம்.

ஆனா அதுதான் ஆடை படமா?

“டிவில ஒவ்வொரு ட்ரஸா அவுத்துக்கிட்டே கூட என்னால நியூஸ் வாசிக்க முடியும்டி”னு சவால் விடுற அமலாபாலுக்கு சவால் விடுறதுன்னா பாயாசம் சாப்புடுற மாதிரி.

நீ மட்டும் தான் பைக்ல வேகமா போவியா? தண்ணியடிக்குறதுல உனக்கு மட்டும் தான் ஆசயா?னு ஒவ்வொரு விசயத்திலயும், “ஆம்பள ராங்குன்னா நான் ராங்குக்கு ராங்கு” அப்படின்ற கெத்து கேரக்டர் அமலாபாலுக்கு. ஆடையில்லாம ஒரு பில்டிங்ல மாட்டிக்கிற ஒரு சூழல் வருது மேடத்துக்கு. உடனே அவரோட தைரியம் எல்லாம் கரைந்து துளி ஆடையாவது கிடைக்குமா? என்றும் தன் அம்மாவிடம் தான் மானத்தோடு வந்துவிடுவேனம்மா என்றும் பரிதவிக்கிறார் பால். இப்ப இந்தக் கேரக்டர் மேல பரிதாபம் வருமா? நமக்கு வரல. படத்தோட முதல் சறுக்கல் இங்கதான்னு தோணுது.

பெண்ணுக்கு அகங்கராம் இருக்கக் கூடாதுங்கிற குறியீடு தான் அமலாபால் கேரக்டரா? அப்படின்ற குழப்பமும் வந்துச்சி.

தன் ஆண் நண்பர்கள் முன்னாடி போதையில ட்ரஸை அவிழ்க்க தயாராகும் அமலாபால் தந்தை வயதொத்த ஒரு காவல் அதிகாரியிடம் உதவி கேக்குறதுல என்ன இருக்குன்னு தெரியல. மறைஞ்சி நின்னு கேட்ருந்தா கூட எதாவது உதவி கிடைச்சிருக்குமே அம்மா. அந்தப் போலீஸ்களை வில்லன் போல காட்டிருந்தா கூட பர்வால. அதுவும் கிடையாது. அது மட்டும் அல்லாமல் ரொம்ப தைரியமான கேரக்டர்னு டைரக்டர் முன்னமே சொல்லிட்டாப்ல. ஒருவேளை, “என்னதான் நீங்க தைரியமான ஆளா இருந்தாலும் ஆடை மேட்டர்ல உங்க ஆட்டம் செல்லாதுடியோவ்” அப்படின்னு இயக்குநர் உணர்த்துனாரா? அதுவும் புரியல.

படத்தின் ஆகப்பெரும் ஹீரோன்னா கேமராமேன் தான். அமலாபால் ட்ரஸ் இல்லாமல் வர்ற காட்சிகளை ஆபாசம் விரசம் இல்லாமல் காட்சிப்படுத்தி இருக்கிறார். நிச்சயம் இயக்குநருக்கும் இந்த விசயத்தில் ஏராளமான பாராட்டுக்கள்.

இப்படியான பில்டிங்க்ல அமலாபாலை இப்படியான நிலைமைக்குத் தள்ளுன கேரக்டர் எஸ்டாபிளேஸ் ஆகி வெளில வரும்போது லேசா அட போட வச்சாலும், அந்தக் கேரக்டர் சொன்ன நியாயங்களை எல்லாம் அமலாபால்ட சாரி கேட்க வச்சி சாகடிச்சிட்டாங்க. எதுக்கு.

விளையாட்டு வினையாடும்னு சொல்ல வந்த விசயம்லாம் செரிதேன். அதுக்கு ஏன் இம்புட்டு காணம் கெடந்து இழுத்தடிக்கணும்?

முடிவுல பெண்களை இழிவுப்படுத்துறதும் இழிவா நினைக்கிறதும் மலிவான செயல்னு புதுசா ஒரு விசயத்தைக் கொண்டாந்து மீடூ பிரச்சனைன்ற மேட்டரை உள்ள கொண்டுவந்து படத்துக்குப் புதுசா ஒரு கலர் அடிக்கிறாங்க. நேரடியா வைரமுத்துவை குத்தி இருக்காங்க.

அப்புறம் ராதாரவின்ற பேர்ல ஒரு போலீஸ் வருவாப்ல. அந்தப் போலீஸைப் பார்த்து அமலாபால் பிரண்ட்ஸ் பேசுவாங்க..

“நிழல்கள் பண்ணதால நிழல்கள் ரவி. ஜெயம் பண்ணதால ஜெயம் ரவி, இவரு ராதாவைப்…..தால ராதாரவி” ராதாரவியைக் கொச்சைப் படுத்துறதா நினைச்சி இதைச் செஞ்சிருக்காங்க. வைரமுத்து மேட்டரும் அப்படித்தான். நடுநிலை நக்கின்னு ஒரு இடத்தில கமலையும் செஞ்சிருக்காங்க. தேவைப் பட்டு வைச்சா பரவால்ல. வைக்கணும்னு ஏன் வைக்கணும்? ராதாரவி வைரமுத்து விமர்சனத்துக்கு உள்ளானவங்களா இருக்கலாம். அதுக்காக…..இப்படியா?

தேவையான விசயத்தை சொல்றோம்னு அதோட நிக்காம திக்கு தெரியாம கண்டதையும் தொட்டு நல்ல பண்டமா வர வேண்டிய படத்தைக் கண்டம் பண்ணிட்டாங்க. படத்துல ஹீரோயின் ப்ராங் ஸோ பண்ணுவாங்க. இயக்குநரும் அதைத் தான் செஞ்சிருக்காப்ல!